Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி விவகாரம்: விடுதியில் மாணவியை தூக்கி செல்லும் சி.சி.டி.வி காட்சி வெளியீடு…. பரபரப்பு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி படித்துவந்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் சென்ற மாதம் 13-ம் தேதி இறந்தார். கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த இம்மாணவியின் பெற்றோர் சாவுக்கு நீதிக் கேட்டு போராட்டத்தில் இறங்கினர். கடந்த 17- ஆம் தேதியன்று மாணவர் அமைப்பினர் மற்றும் பல அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரத்தில் முடிந்தது. தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தை தொடர்ந்து பள்ளி தாளாளர் ரவிக் குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா போன்ற 5 பேரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

அத்துடன் மாணவி சாவு குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன்பின் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் பள்ளியிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை கைப்பற்றி பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி காவலாளி மற்றும் ஆசிரியர்கள் உட்பட 50-க்கும் அதிகமானவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கைதான 5 பேரையும் ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். சென்ற சில நாட்களுக்கு முன் மாணவி வகுப்பறையிலிருந்து சீருடையில் நடந்து செல்வது, வகுப்பறைக்கு சோகத்துடன் சென்று பெஞ்சில் படுப்பது போன்ற சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பள்ளி விடுதியிலிருந்து மாணவி கீழே விழுந்து கிடப்பது, அவரை 3 ஆசிரியைகள் மற்றும் காவலாளி ஒருவர் தூக்கி செல்லும் காட்சியும் வெளியாகியது. அந்த வீடியோ காட்சி அதிகாலை 5:23 மணிக்கு பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி. காட்சியில் மாணவி கீழேவிழுந்து கிடந்ததை போன்றும், அந்த மாணவியை தூக்கிசெல்லும் காட்சி மட்டுமே இடம்பெற்றிருந்தது. எனினும் மாடியிலிருந்து தான் மாணவி கீழேவிழுந்தாரா என்பது குறித்து அவ்வீடியோவில் காட்சி ஏதுவுமில்லை. இதன் காரணமாக மாணவி இறப்பில் மர்மம் நீடித்துவருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |