Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறுவர்களை பணி அமர்த்துவது சட்டப்படி குற்றம்…. விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!

சட்ட விதிமுறைகளை மீறி சிறுவர்களை பணிஅமர்த்தினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர், தொழிலாளர் கமிஷனர் ஆகியோர் அறிவுரைகளின் படி குழந்தை தொழிலாளர் மற்றும் வளர் இளம்பருவ தொழிலாளர் சட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான குழந்தை தொழிலாளர் தடுப்பு குழுவினருடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள உணவு நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர் பணி புரிந்ததாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சென்னை 2-ம் வட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் உத்தரவின் படி சென்னை 18-ம் வட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர் ‘ஆபரேஷன் ஸ்மேல்’ குழு மற்றும் தன்னார்வ குழுவினருடன் புகார் தெரிவிக்கப்பட்ட உணவு நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அங்கு வேலை பார்த்த சிறுவன் நீக்கப்பட்டு குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டான். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வேலையளிப்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அதில் சைதாப்பேட்டை 11-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிறுவனை பணியமர்த்தியது குற்றம் என தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் ரூ.20,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து குழந்தை மற்றும் வளரும் பருவத்தினரை பணியில் அமர்த்துவது சட்டப்படி குற்றம் ஆகும் எனவும் இதனை மீறினால் நிறுவனங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அபராதம் அல்லது சிறை தண்டனை வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |