Categories
தேசிய செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். மூத்த சிந்தனையாளர் காலமானார் …..!!

ஆர்.எஸ்.எஸ். மூத்த சிந்தனையாளர் பரமேஸ்வரன் காலமானார். அவருக்கு வயது 93.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர். பாரதிய விசர்ய கேந்திரம் என்ற அமைப்பை தொடங்கி நடத்திவந்தார்.
இந்நிலையில் அவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது நண்பர்கள், ஆயுர்வேத சிகிச்சை அளித்துவந்தனர்.

இந்த நிலையில் நேற்று அவர் உயிர் பிரிந்தது. பரமேஸ்வரன் மிகச்சிறந்த பேச்சாளராக அறியப்படுகிறார். 1957ஆம் ஆண்டு பாரதிய ஜனசங்கத்தில் மாநிலத் தலைவராக இருந்தார்.
அதன்பின்னர் 1982ஆம் ஆண்டு பாரதிய விசர்ய கேந்திரம் என்ற அமைப்பை தொடங்கி நடத்திவந்தார்.

பரமேஸ்வரனின் இழப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பாரத தாயின் அர்ப்பணிப்புடன் கூடிய மகன். அவர் ஒரு ஞானி. அவருடன் பலமுறை உரையாடியுள்ளேன். அவரது மறைவால் வருந்துகிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி.” என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |