Categories
மாநில செய்திகள்

“அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம்”…. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சொன்ன பதில்…..!!!!

அ.தி.மு.க பொதுக்குழு குறித்த வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த கோரிக்கைக்கு விளக்கமளித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தனி நீதிபதியான நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியின் கருத்தை அறிந்து உத்தரவு பிறப்பிப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடைவிதிக்கக் கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து போன்றோர் தொடர்ந்த வழக்குகளை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார்.

இந்நிலையில் உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி அவர்கள் தொடர்ந்த இடைக் கால மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம் குறித்த வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் தனிநீதிபதிக்கு உத்தரவிட்டது. அந்த வகையில் இவ்வழக்குகள் நீதிபதியான கிருஷ்ணன்ராமசாமி முன் நாளை பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் நீதிபதியான கிருஷ்ணன் ராமசாமி சென்ற ஜூலை 11-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், பன்னீர்செல்வம் தொடர்பாக தேவையில்லாத கருத்துக்களை தெரிவித்து இருப்பதால் பொதுக் குழு பற்றிய வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. இவ்விவகாரம் பற்றி ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதி முன்பாக வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி முறையீடு செய்தார். அதை கேட்ட தலைமை நீதிபதி, வழக்கை ஒரு நீதிபதியிடமிருந்து மற்றொரு நீதிபதிக்கு மாற்றுவதில் தனக்கு உடன்பாடில்லை என தெரிவித்தார். எனினும் இருவரின் கடிதங்களையும், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியுடன் ஆலோசித்து அவரது கருத்தையும் அறிந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |