Categories
உலக செய்திகள்

பங்களாதேஷில் தந்தை, மகன் மர்ம மரணம்… வழக்கில் புதிய திருப்பம்…!!!

பிரிட்டன் நாட்டை சேர்ந்த தந்தை மற்றும் மகன் இருவரும் பங்களாதேஷில் மர்மமாக மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Cardiff வசிக்கும் Rafiqul Islam, தன் குடும்பத்தினருடன் விடுமுறை நாட்களை கொண்டாட பங்களாதேஷ் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு  தங்கியுள்ளனர். சாப்பாடு முடிந்த பின் ஓய்வெடுக்க சென்ற போது, அவர்கள் சுயநினைவை இழந்து கிடந்தது கண்டறியப்பட்டது.

அவர்களை, மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே  Rafiqul Islam மற்றும் அவரின் 16 வயது மகன் Mahiqul இருவரும் இறந்தனர். அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. காவல்துறையினர் விசாரணை நடத்த தொடங்கியிருக்கிறார்கள்.

எனினும், முதல் கட்ட பரிசோதனையில் அவர்கள் உடலில் விஷம் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்நிலையில், Rafiqul மனைவி மற்றும் மற்றொரு மகன் நேற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்கள். அவர்கள் தெரிவித்த தகவலின் படி, அந்த வீட்டில் மின்சாரத் தடை இருந்துள்ளது.

எனவே, அங்கிருந்த பழைய ஜெனரேட்டர் இயக்கப்பட்டதாக கூறியிருக்கிறார்கள். அதன்படி காவல்துறை அதிகாரி ஒருவர் அந்த குடியிருப்பிற்கு சென்று ஜெனரேட்டரை இயக்கி பார்த்திருக்கிறார். அதிலிருந்து அதிகப்படியான புகை வெளியேறியதாக அவர் தெரிவித்திருக்கிறார். இது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக அந்த புகை மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டது. புகையிலிருந்த ரசாயனம் இறந்து போன தந்தை, மகன் மற்றும் உயிர் பிழைத்த மீதமுள்ள இருவரின் உடலில் இருக்கிறதா? என்பதற்கான ஆய்வு நடப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |