எகிப்தில் தறிக்கெட்டு ஓடிய பஸ் எதிர் திசையில் வந்த லாரி மீது பயங்கரமாக மோதியதில் 17 பேர் சம்பவ சம்பவ இடத்திலேயே பிரதாபமாக உயர்ந்துள்ளனர்.
எகிப்து நாட்டில் உள்ள தெற்கு பகுதியில் சோஹாக் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ஜுஹைனா மாவட்டத்திலிருந்து பயணிளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அங்குள்ள ஒரு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிக்கெட்டு ஓடிய பஸ் எதிர்திசையில் வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் பஸ் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்கப்பட்டு மருத்துவமனையல் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக கடந்த மாதம் 20-ந்தேதி எகிப்தின் மினாயா மாகாணத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது பஸ் மோதி விபத்து ஏற்பட்டது 23 பேர் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டவர்கள படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.