மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் ஊராட்சியில் ஆஸ்டின்பட்டி அரசு தொற்று மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்கு அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தின் தென் பகுதியில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேமிக்கப்பட்டிருப்பதாக தெரிகின்றது. அதனை ஆலைக் கொண்டு சென்று அரிசியாக அரைத்து நியாய விலை கடைகளுக்கு அனுப்பி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது. இந்த சூழலில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்த பகுதியில் தொடர் மழை பெய்தது.
அதில் கிடங்கு அருகே திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மனையில் நனைந்தது. அதனால் அவைகள் மீண்டும் நெற்ப்பயிராக முளைத்து வளர்ந்து வீணாகி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்திருக்கின்றனர். இதே போல கப்பலூர் மேல்குடியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் மூட்டைகள் நனைந்த தகவல் கிடைத்ததும் திருமங்கலம் கோட்டாட்சியர் அபிநயா, மதுரை துணை மண்டல மேலாளர் கார்த்திகேயன் போன்றோர் நேற்று அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோட்டாட்சியர் அபிநயா குடோன் மேலாளரிடம் மழையில் நெல் மூட்டைகள் நனையாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.