போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
சென்னையில் உள்ள குரோம்பேட்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதியம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த 6-ம் கட்ட பேச்சு வார்த்தையில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார். அதன் பிறகு அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கடந்த ஆட்சியின் போது ஜூனியர், சீனியர் வித்தியாசம் இன்றி தொழிலாளர்கள் ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை அரசால் ஏற்றுக்கொண்ட போதிலும், அதை செயல்படுத்துவது தொடர்பாக நிதி துறையிடம் ஆலோசனை நடத்த வேண்டும். தொழிற்சங்கத்தினர் ஒப்பந்த பேச்சு வார்த்தை காலத்தை 4 வருடங்களாக உயர்த்தக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை.
இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது தொடர்பாக மற்றொரு நாளில் பேச்சுவார்த்தை நடக்கும். இந்நிலையில் 4 வருடங்களுக்கு ஒரு முறை தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்துவது தொடர்பான அரசின் முடிவுக்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைடுத்து ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி வழங்குவது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும், அகவிலைப்படி உயர்வு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலைமையில் இருப்பதால் அது சம்பந்தமாக எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது என்றார். மேலும் போக்குவரத்து துறை நஷ்டத்தில் செயல்பட்டு வரும் போதிலும், கட்டணத்தை உயர்த்த கூடாது என முதல்வர் அறிவுறுத்தியதால் போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம் தொடர்பாக நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்றார்.