Categories
அரசியல் மாநில செய்திகள்

திராவிட மாடலின் பிதாமகன்…! எதை வச்சு அடிக்கலாம்னு தெரில ? சீமான் கடும் விமர்சனம் ..!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் சீமான், பள்ளிக்கூடத்தில் யாராவது பிள்ளைகள் தற்கொலை செய்து கொண்டாலோ, கற்பழித்து கொலை செய்தாலோ அதை செய்தியாக்கி விடாதீர்கள் என்று அரசு உத்தரவு போடுகிறது, எப்படிப்பட்ட அரசு கோயம்புத்தூரில் ஜி.ஆர்.டினு ஒரு பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளை சேர்க்க வரும் போது பெற்றோர்களிடம் ஒரு கையெழுத்து வாங்குகிறார்கள். ஒரு படிவத்தில் பள்ளிக்கூடத்திற்குள் வளாகத்திற்குள் உங்கள் பிள்ளைகளுக்கு ஏதாவது நேர்ந்து உயிரிழந்து விட்டாலோ, அல்லது வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டாலோ பள்ளிக்கூட நிர்வாகம் பொறுப்பேற்காது.

உரிமம் இரத்து:

பெற்றோர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். எப்படி இருக்கு ?  எப்படிப்பட்ட பள்ளிக்கூடம், உரிமம் ரத்து செய்யப்படும்னு தமிழக அரசு சொல்லுமா ? இப்படி எல்லாம் செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் பொறுப்பு ஏற்காதா? எப்டி. குடிநீர் வராது, மின் தொடர்பு வராது உனக்கு, இது எதுவுமே வராது. ஐயோ எனக்கு மின்சாரம் வரல, தண்ணீர் வரல, அரசு பொறுப்பேற்காது அவ்வளவு தானே…  என்னடா, எப்டி காலக்கொடுமை…

நிலத்திற்குள்:

கெயில்எரிவாயுவ வந்து கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு கொண்டு வாராங்க. கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும்போது தேசிய நெடுஞ்சாலையில் பாதை குழாய்கள் அமைத்து கொண்டு வாரங்க, தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவிற்கு தேசிய நெடுஞ்சாலையில் குழாய் அமைத்து கொண்டு போறாங்க. ஆனால் தமிழ்நாட்டிற்குள் நஞ்சை நிலங்களில் நெஞ்சை இரண்டாக பிளந்து கொண்டு போறாங்க. நிலத்திற்குள்ள..

திராவிட மாடலின் பிதாமகன்:

கையெழுத்து போட்டு அனுமதி கொடுத்த பெருந்தகை யார் தெரியுமா? திராவிட மாடலின் பிதாமகன் ஐயா கருணாநிதி அவர்கள் தான். ஏய், கேரளாவில் இருந்து எப்டி கொண்டு வார! நெடுஞ்சாலை வழியாக.. இங்க இருந்து எப்டி  கர்நாடகவிற்கு கொண்டு வார! நெடுஞ்சாலை வழியாக.. அப்படியே கொண்டு போ முடிஞ்சி போச்சி..  ஆனால் தமிழ்நாட்டிற்குள் வரும்போது மட்டும் நிலத்திற்குள் கொண்டுவராங்க. போராட்டத்தில் நான் பங்கேற்று பேசினேன். அங்கிருந்த அப்பாகிட்ட கேட்டேன். எப்படி ப்பா  இதற்கு அனுமதி கொடுத்தீங்கன்னு, தம்பி தண்ணி கொண்டு போறோம் என்று சொன்னாங்கடா.. தண்ணீர் தானே நிலம் குளு குளுன்னு இருக்கும் என்று கொடுத்துட்டோம்டா.. அதுவரைக்கும் தண்ணீர் என்று நினைத்தார்கள்.

மரண தண்டனை:

அதன் பிறகு ஒரு உத்தரவு வருது. கெயில் எரிவாயு போகுது அதில், ஏதாவது குழாயில் வெடிப்பு ஏற்பட்டு பேரிடர் நேர்ந்தால் நிலத்தின் உரிமையாளரே அதற்கு பொறுப்பு, எப்படி பொறுப்பு, ஜி.ஆர்.டி பள்ளிக்கூடம் கொடுக்குதுல்ல பெற்றோரே பொறுப்பு, அந்த பொறுப்பு தான். அதுக்கு அப்படி ஒரு பேரிடர் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டால் நிலத்தின் உரிமையாளரே அதற்கு பொறுப்பு. அதற்கு அவருக்கு தண்டனை, உயர்ந்த தண்டனையாக மரண தண்டனை வரைக்கும் கொடுக்கலாம், எப்படிப்பட்ட தீர்ப்பு.

என்ன வச்சு அடிக்கலாம்:

என் நிலத்தை உங்களுக்கு கொடுத்துவிட்டு அதில ஏதாவது வெடிப்பு ஏற்பட்டு பேரிடர் வந்தால், நான் தூக்கில் தொங்கனும். எப்படிப்பட்ட நாடு. இவர்களுக்கு காச லட்சம் லட்சமா கொட்டி என்  பிள்ளைகளைப் படிக்க அனுப்பிட்டு அவன் கற்பழித்து கொலை செய்துவிட்டால் நானே பொறுப்பு ஏற்கணும். எப்படி கோர்ட்ல போய் எஜமான் நான்  தான் என் பிள்ளையை கற்பழித்துக் கொன்னுட்டேன் அப்படின்னு சொன்னா.. என்று சொல்ல முடியுமா ?  இவங்கள என்ன.. இவங்கள என்ன வச்சு அடிக்கணும்னு நெனைக்குற நீனு. என்ன வச்சு அடிக்கணும்..

வேடிக்கை பார்க்குது:

இப்ப அந்த பள்ளிக்கூடத்திற்கு நாம ஒரு தடவ போனும், இங்க வாங்க எஜமான், இங்க வாங்க, நீங்க தானா.. அப்படி எதுக்குடா  பள்ளிக்கூடம் நடத்துற மூடுறா..  மூடுறா நீ..  எப்படி.. எப்படிப்பட்ட இந்த கள்ளக்குறிச்சியில் ஸ்ரீமதிக்கு நடந்த அந்த கொடுமையை பார்த்து தனியார் பள்ளிகள் தங்களை மாற்றிக் கொள்ளும் முறையாக நிர்வாகம் செய்யும் ஒழுங்காக நடந்து கொள்ளும் என்று நாம் எதிர்பார்க்கிறபோது இந்த வேலையஆரம்பிக்குறான்.. பெற்றோர் தான் பொறுப்பேற்கணும்.. அப்படி இல்லையா சான்றிதழை வாங்கிட்டு டிசியை வாங்கிட்டு போ.. இப்போ அந்த ஜி. ஆர்.டி பள்ளிக்கூடத்தில் இருக்கின்ற மொத்த பேரும் டிசி வாங்கிக்கொண்டு வெளியே வாங்கடா அப்டின்னு நா சொல்றேன்.. வெளியே வா.. எப்படி அது.. இதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது பாருங்க என சீமான் விமர்சனம் செய்தார்.

Categories

Tech |