Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பார்சலை அனுப்பாத கூரியர் நிறுவனம்….15 ஆயிரம் அபராதம்…. உத்தரவிட்ட மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்….!!!!

பார்சல் அனுப்பாத கூரியர்  நிறுவனத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒரு தனியார் கூரியர்  நிறுவனம் மூலம் 39 ஆயிரத்து 998 ரூபாய் மதிப்பிலான துணிகளை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பல நாட்கள் ஆகியும் பார்சல் எதுவும் வரவில்லை. இதனால் சுரேஷ்குமார் வக்கீல் மூலம் அந்த தனியார் கூரியர்  நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் எந்த ஒரு பதிலும் வரவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ்குமார் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் நேற்று இந்த வழக்கு தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூரியர்  நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட சதீஷ்குமாருக்கு துணிகளின் மொத்த விலையான 39 ஆயிரத்து 999 ரூபாயையும், அதற்கு அபராதம்  15 ஆயிரம்  ரூபாய், வழக்கு செலவு  செய்த தொகை 3 ஆயிரம்  என மொத்தம் 57 ஆயிரத்து 998 ரூபாய் பணத்தை 1 மாத காலத்திற்குள் கூரியர்  நிறுவனம் வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |