கருக்கலைப்பு செய்வதற்கு சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூவாடு கிராமத்தில் அம்மாசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியநாயகி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 ஆண் மற்றும் 1 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பெரிய நாயகி மீண்டும் 2 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதனால் பெரியநாயகி கருக்கலைப்பு செய்வதற்காக சேலம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வைத்து திடீரென பெரியநாயகி உயிரிழந்து விட்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அம்மாசி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து மருத்துவக் குழுவினர் அந்த மருத்துவமனையில் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் மருத்துவர்கள் பெரியநாயகிக்கு மருத்துவ கலைப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யாமல் கருக்கலைப்பு செய்ததும், அதற்கான மாத்திரைகளுக்கு பதிலாக வேறு மாத்திரைகளை கொடுத்ததுள்ளனர். இதனால் பெரிய நாயகி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஷ்ரவண் குமார் , சுகாதாரத்துறை இணை இயக்குனர் பாலச்சந்தர் உள்ளிட்ட அதிகாரிகள் அந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அதன்பின்னர் அங்கிருந்த செவிலியர்கள், நோயாளிகள் என அனைவரையும் வெளியேற்றிவிட்டு மருத்துவமனையை பூட்டி சீல் வைத்துள்ளனர்.