ஈராக் அரசியலில் சியா தலைவர் முக்தாதாம் அல்-சதர் ஒரு காலத்தில் அமெரிக்க எதிர்ப்பு போராளிகளை வழி நடத்தியவர் மற்றும் லட்சக்கணக்கான ஆதரவாளர்களைக் கொண்ட செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்துள்ளார். கடந்த வருடம் அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி 73 இடங்களை வென்ற நிலையில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் இழுபறி நீடித்து வருகிறது. ஈரான் ஆதரவு ஒருங்கிணைப்புடன் ஈராக்கில் பிரதம வேட்பாளர்களுடன் அரசாங்கத்தை அமைக்க அல்-சதர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாக அல்-சதர் மற்றும் அவரது போட்டியாளர்களுக்கு இடையிலான முட்டுக்கட்டையால் தேர்தல் முடிந்து பல மாதங்கள் கடந்தும் கூட ஈராக்கில் ஒரு சாதனையாக இன்னும் அரசாங்கம் இல்லாத நிலை இருக்கிறது. இதற்கிடையே கடந்த சனிக்கிழமை அன்று பாராளுமன்ற கட்டிடத்தை அல்-சதர் ஆதரவாளர்கள் இரண்டாவது முறையாக முற்றுகையிட்டுள்ளனர். கடந்த ஐந்து நாட்களாக போராட்டக்காரர்கள் கட்டிடத்திற்கு மேல் மறியல் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை சுற்றி கூடாரங்கள் மற்றும் உணவு கடைகளுடன் கூடிய முகாமை அமைத்திருக்கின்றனர்.
இந்த சூழலில் அல்-சதர் தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பாக்தாத்தில் உள்ள நாடாளுமன்றத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களை அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் நாடாளுமன்றத்தை கலைத்தல், மற்றும் முன்கூட்டியே தேர்தல் நடத்துவது உட்பட அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளங்களை அவர் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தை கலைத்து முன்கூட்டியே தேர்தல் நடத்துங்கள் நான் இதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் என அல்-சதர் ஒரு தொலைக்காட்சி உரையில் தெரிவித்துள்ளார்.