காவிரியில் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதை அடுத்து ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். மழை, வெள்ள நிலவரம் திருச்சி, கரூர் உள்ளிட்ட 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் போதிய முன்னறிவிப்பின்றி அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகரிக்க கூடாது என 12 மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்தி ஆலோசனைக்கு பிறகு முதல் பஸ் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இரவு நேரத்தில் தண்ணீர் அளவு வெளியேற்றத்தை அதிகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு தரமான உணவு மற்றும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.