வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள எழுமலை தெற்கு தெருவில் கோட்டை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வழக்கறிஞரான முருகன்(31) என்ற மகன் இருந்துள்ளார். இவர் உசிலம்பட்டி நீதிமன்றத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சத்யா என்ற மனைவியும், 2 1/2 வயதுடைய பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் முருகன் தனது மனைவியை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு சீல்நாயக்கன்பட்டியில் இருக்கும் சுருளியப்பன் என்பவரது தோட்டத்திற்கு சென்று மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதற்கிடையே கணவர் கோபத்தில் சென்றதால் சத்யா முருகனை பின்தொடர்ந்து தோட்டத்திற்குள் வந்துள்ளார். அப்போது தனது கணவர் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முருகனின் உடலை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தபோது விசாரணை நடத்தி வருகின்றனர்.