Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீ எப்படி பேசாமல் இருக்கலாம்…. காதலி முகத்தில் கத்தியால் குத்திய காதலன்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கல்லூரி மாணவியின் முகத்தில் கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் 21 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர்  பள்ளி படிக்கும் போது அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் மாணவியை கண்டித்துள்ளனர். இதனால் அந்த மாணவி கடந்த 2 மாதங்களாக பிரசாந்திடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த மாணவி கல்லூரி அருகே அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் நின்றுள்ளார். அப்போது அங்கு வந்த பிரசாந்த் எதற்காக என்னிடம் பேச மறுக்கிறாய்? என்று கூறி தகராறு செய்துள்ளார்.

மேலும் அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு மாணவியின் முகத்தில் சரமாரியாக கீறிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் படுகாயம் அடைந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாணவியின்  பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பிரசாந்தை  கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |