தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருப்பூர்,தேனி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழையும் மதுரை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழையும், கோவை,தேனி மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.