Categories
விளையாட்டு

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்…. வரும் 17-ம் தேதி…. வெளியான அறிவிப்பு….!!!!

தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 தொடரில் விளையாடியது. ஒரு நாள் தொடர் 1-1 எனும் கணக்கில் சமமாகியது. இதில் டி20 தொடரில் தென்ஆப்பிரிக்கா அணியானது 2-1 எனும் கணக்கில் கைப்பற்றியது. இருஅணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 17-ம் தேதி தொடங்கிறது. இந்த நிலையில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்காக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அணியில் வேகப் பந்து வீச்சாளர் ஓலி ராபின்சன் இடம்பிடித்துள்ளார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த வருடத்தின் தொடக்கத்தில் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் இருந்து ராபின்சன் விளையாடவில்லை. இந்திய டெஸ்டின்போது கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பென் ஃபோக்ஸ் மீண்டுமாக அணியின் இணைந்துள்ளார். நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்போட்டியில் அறிமுகமாகவில்லை என்றாலும், ஹாரி புரூக் அணியில் தக்கவைக்கப்பட்டு இருக்கிறார்.

Categories

Tech |