Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் வாகனங்களின் விற்பனை….. ஜூலை மாதத்தில் 8% சரிவு…. வெளியான அறிவிப்பு….!!!!

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை விட இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வாகன விற்பனை 8 சதவீதம் சரிந்துள்ளதாக டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான டீலர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கார்கள், மோட்டார்கள், சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், டிராக்டர்கள் விற்பனை கடந்த மாதம் குறைவாக இருந்தது. அனைத்து வகை வாகனங்களின் விற்பனை கடந்த ஆண்டு ஜூலையில் 15 லட்சத்து 59 ஆயிரத்து 106 ஆக இருந்தது.

ஆனால் இந்த ஆண்டு மோட்டார் வாகனங்களின் விற்பனை 14,36, 927 ஆக குறைந்துள்ளது . கார்,  பேருந்துகள் உள்ளிட்ட பயணி வாகனங்களின் விற்பனையானது கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு ஐந்து சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் 2,63,238 ஆக இருந்த கார்கள், பேருந்துகள் விற்பனை இந்த ஆண்டு ஜூலையில் 2,50,972 ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் 11,33,344-ஆக இருந்த இருசக்கர வாகனங்களின் விற்பனை இந்தாண்டு ஜூலையில் 10,09,574-ஆக சரிந்திருக்கிறது.

இதேபோல் கடந்த ஆண்டு ஜூலையில் 82,419-ஆக இருந்த டிராக்டர் விற்பனை 2022 ஜூலையில் 28 சதவீதம் சரிந்து 59,573-ஆக உள்ளது. அதே நேரத்தில் கடந்த ஜூலையில் 27,908-ஆக இருந்த 3 சக்கர வாகன விற்பனை இந்த ஆண்டு ஜூலையில் 80 சதவீதம் அதிகரித்து 50,349-ஆக உள்ளது. லாரிகள் உள்ளிட்ட வர்த்தக வாகனங்களின் விற்பனை 2021 ஜூலையை விட 27 சதவீதம் உயர்ந்து 66,459 ஆக இருக்கிறது என்று டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |