மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள சீத்தப்பட்டியில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா(22) என்ற மகள் உள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு ரம்யா வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் ரம்யா வீட்டிற்கு வரவில்லை. இதனால் ரம்யாவின் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் கருணாநிதி தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரம்யாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.