Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 6 முதல் புது ரூட்டில் வரும் ரயில்…. பயணிகளுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து ரயில் சேவைகளும் படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் கர்நாடக மாநிலம் ஹுப்லி நகரத்திலிருந்து நாமக்கல் வழியாக ராமேஸ்வரம் வரையிலான வாராந்திர சிறப்பு ரயில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இந்த புதிய ரயில் வரும் சனிக்கிழமை முதல் இந்த நேரப் பட்டியலில் இயங்கும்.

ஹூப்ளி ( காலை 6.30), யஷ்வந்த்பூர் (மதியம் 2.45), பனஸ்வாடி (மதியம் 3.10), ஓசூர் (மாலை 4.02), தருமபுரி ( மாலை 4.52) , ஓமலூர் (இரவு 7.30) , சேலம் சந்திப்பு (இரவு 7.55) , நாமக்கல் (இரவு 8.45) , கரூர் (இரவு 10.00) , திருச்சி (நள்ளிரவு 12.22) , புதுக்கோட்டை (நள்ளிரவு 01.03), ராமேஸ்வரம் (ஞாயிறு காலை 06.15) வந்தடையும்.

அதேபோல, ஞாயிற்றுக் கிழமைகளில் ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 09 மணியளவில் புறப்பட்டு புதுக்கோட்டை ( அதிகாலை 01.52), திருச்சி (அதிகாலை 02.05) , கரூர் (காலை 03.48), நாமக்கல் ( காலை 4.19), சேலம் சந்திப்பு (காலை 05.45), ஓமலூர் (காலை 06.45), தருமபுரி ( காலை 07.13), ஒசூர் (காலை 08.50), பனஸ்வாடி (காலை 10.00), யஷ்வந்த்பூர் ( காலை 11.30) ஹூப்ளி (திங்கட்கிழமை இரவு 7.35) வந்து சேரும்.

மேலும் இந்த சிறப்பு ரயிலில் இரண்டு அடுக்கு ஏசி-1, மூன்று அடுக்கு ஏசி-3, படுக்கை வசதி-09, முன்பதிவில்லா பெட்டிகள்-5, இரண்டு லக்கேஜ் பெட்டிகள் என மொத்தம் 20 பெட்டிகளை கொண்ட ரயிலாக இயங்கவுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |