கனமழை காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரக்கூடிய காய்கறிகளின் வரத்தானது குறைந்து வருகின்றது. இதனால் காய்கறிகள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கனமழை காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் காய்கறிகளின் அளவு 7000 டன்னிலிருந்து 5500 டன்னாக குறைந்துள்ளது.
இதனால் காய்கறிகளின் விலை 10 லிருந்து 15 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. காய்கறி நிலவரம் பின்வருமாறு:
வெங்காயம் – ரூ.21, நவீன் தக்காளி – ரூ.15, நாட்டு தக்காளி – ரூ.15, உருளை – ரூ.40, சின்ன வெங்காயம் – ரூ.38, ஊட்டி கேரட் – ரூ.65, ஊட்டி பீட்ரூட் – ரூ.50, கர்நாடக பீட்ரூட் – ரூ.22, முள்ளங்கி – ரூ.20, முட்டைக்கோஸ் – ரூ.30, வெண்டை – ரூ.15, உஜாலா கத்தரி – ரூ.25, வரி கத்தரி – ரூ.25, பாகற்காய் – ரூ.35, முருங்கைக்காய் – ரூ.35, புடலங்காய் – ரூ.20, சேனைக்கிழங்கு – ரூ.28.