Categories
மாநில செய்திகள்

Eps-க்கு ஷாக்…. தட்டி தூக்கிய ஓபிஎஸ்…. சேலத்தில் பெருகும் ஆதரவாளர்கள்….!!!!

அதிமுகவில் ஒற்றை தலமை விவகாரம் தலை தூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக நிற்கிறது. இதில் அதிமுகவினர் பெரும்பாலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக எடப்பாடி பழனிச்சாமி சொந்தமான சேலத்தில் இருந்து அதிமுக நிர்வாகிகள் தேனி மாவட்டம் பெரிய குளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் நிலத்திற்கு வருகை தந்து அவரை சந்தித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர். அப்போது சேலம் மாநகர மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் நாமக்கல் மாவட்டம் ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமி சேலம் ரவி ஆகியோர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து ஓபிஎஸ் சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்கள், சேலம் மாணவரில் அதிமுக உருவாகிய காலத்தில் இருந்த உறுப்பினர்களுக்கு யாருக்கும் உரிய மரியாதை இல்லை என்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் சேலம் மாநகர மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து வந்து விரைவில் ஓபிஎஸ்சை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து நாமக்கல் மாவட்டத்திலிருந்து வந்த அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கூறியது, ஓபிஎஸ்சை அதிமுகவிலிருந்து ஒதுக்குவது அடிமட்ட தொண்டர்களுக்கு யாருக்கும் பிடிக்காத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும்,, மரியாதை இல்லாத இடத்தில் இருப்பதை தவிர்த்து ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்து அவரை சந்தித்ததாக தெரிவித்தனர். மேலும் இவர்களுடன் சேலம் மாவட்ட ரவி மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் உடன் வந்து சந்தித்தார்கள்.

Categories

Tech |