எம்.பி ஒருவர் நிர்வாணமாக பெண்ணிடம் வீடியோ காலில் பேசும் வீடியோவானது இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள இந்துபுரம் தொகுதியின் எம்.பியாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோரட்லா மாதவ் இருக்கிறார். இவர் ஒரு பெண்ணுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென அந்தரங்க உறுப்பை காட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எம்.பி மாதாவ் செய்தியாளர்களை சந்தித்து இன்று பேசினார்.
அவர் தெலுங்கு தேசம் கட்சியினர் என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக தவறான வீடியோவை மார்பிங் செய்து வெளியிட்டுள்ளனர் என்றார். இது தொடர்பாக நான் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்துள்ளேன். இந்த வீடியோ தொடர்பான விசாரணைக்கு நான் தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.
மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் சமீப காலமாகவே சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அம்பதி ராம்பாபு எம்.எல்.ஏ மற்றும் அவந்தி ஸ்ரீநிவாஸ் எம்.எல்.ஏ ஆகியோர் பெண்களிடம் ஆபாசமாக பேசிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.