இலவச திட்டங்கள் மற்றும் தேர்தலின்போது கொடுக்கப்படும் வாக்குறுதிகளை ஒழுங்குபடுத்த மத்திய அரசு, நிதி ஆயோக், இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகள் ஆலோசனை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பான பொதுநல மனு மீதான விசாரணையில், இலவசங்கள் வழங்குவது எதிர் காலத்தில் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் என்று மத்திய அரசும் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இது குறித்து மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது , இலவசங்களை வழங்குவது என்பது தவிர்க்க முடியாத அளவில் எதிர்கால பொருளாதார பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.