விழுப்புரம் அருகே வாலிபரை தற்கொலைக்கு தூண்டிய தாய் மகனை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை அடுத்த நயம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் சிங்கப்பூரில் ஐந்து ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த நிலையில், 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியுள்ளார். இந்நிலையில் திடீரென பெருமாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள அவரது தற்கொலைக்கு அதே பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் தான் காரணம் என்று கூறிய பெருமாளின் அக்கா சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில்,
எனது தம்பி நயம்பாடு கிராமத்தில் உள்ள கன்னியம்மாள் மற்றும் அவரது மகன் சூர்யா ஆகியோரிடம் பெற்ற 8 ½ லட்சம் பணம் 5 ½ பவுன் தங்க நகை ஆகியவற்றை கொடுத்து வைத்திருக்குமாறு கூறியிருந்தார். ஊருக்கு திரும்பி வந்தவுடன் அதை பலமுறை கேட்ட போதும் அவர்கள் தர மறுத்ததால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து புகாரை ஏற்ற காவல்துறையினர் தாய் மகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள, மறுபுறம் உறவினர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.