161 நபர்களை குண்டத்தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஜோதிபாசு நகரில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னதுரை என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சின்னதுரையை வழிப்பறி கொள்ளை வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேபோல் லிவிங்ஸ்டன் சாமுவேல் என்பவரை ஒரு கொலை முயற்சி வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து இவர்கள் இரண்டு பேரையும் குண்டர் தரப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்துள்ளார்.
அந்தப் பரிந்துரையின் படி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சின்னதுரை மற்றும் லிவிங்ஸ்டன் சாமுவேல் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். பின்னர் இவற்றின் நகலை காவல்துறையினர் பாளையங்கோட்டை சிறைச்சாலையில் வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து நடப்பு வருடத்தில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 10 பேர் மற்றும் போதைப்பொருள் கடத்தல் அல்லது விற்பனையில் ஈடுபட்ட 36 பேர் என மொத்தமாக 161 நபர்கள் குண்டத் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.