மாவீரன் படபிடிப்பு பூஜையுடன் தொடங்கிய நிலையில் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்து விட்டார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இதையடுத்து மண்டேலா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கின்றார். இப்படத்தை ஷாந்தி டாக்கீஸ் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்திற்கு “மாவீரன்” என தலைப்பு வைக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இத்திரைபடத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிக்கின்றார். மேலும் இத்திரைப்படத்தில் இயக்குனர் மிஸ்கினும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். யோகி பாபு, நடிகை சரிதா உள்ளிட்டோரும் திரைப்படத்தில் நடிக்கின்றார்கள். இத்திரைப்படத்தின் படபிடிப்பானது நேற்று சென்னையில் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் பூஜையுடன் படபிடிப்பு தொடங்கிய நிலையில் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
#Maaveeran / #Mahaveerudu shoot began yesterday.
Dir @shankarshanmugh attended the pooja.. @ShanthiTalkies @Siva_Kartikeyan @AditiShankarofl @madonneashwin @iamarunviswa @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 @Kumar_gangappan @LokeshJey @DoneChannel1 pic.twitter.com/hBBa1WmFy4
— Ramesh Bala (@rameshlaus) August 4, 2022