Categories
மாநில செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டம்: வேலூர், திருப்பூர்க்கு கெளரவம்..!!

இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் மந்தமாக இருக்கும் 20 நகரங்களுக்கு வழிகாட்டி  உதவுவதற்காக சிறப்பாக செயல்படும் பிற 20 நகரங்கள் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டது.

வழிகாட்டும் 20 நகரங்கள் பட்டியலில் தமிழகத்தில் திருப்பூர், வேலூர் ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவின் 100 நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் மிகவும் மந்தமாக பணிகள் நடைபெற்று வரும் கடைசி 20 இடங்களில் உள்ள நகரங்களில் பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் மிகச் சிறப்பாக செயல்படும் முதல் 20 இடங்களில் உள்ள நகரங்களில் நிர்வாகங்கள் மிகவும் மந்தமாக செயல்படும் நகரங்களின் நிர்வாகத்திற்கு ஆலோசனை அளித்து உதவும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன்படி சிறப்பாக செயல்படும் முதல் 20 நகரங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள திருப்பூர், ஒன்பதாவது இடத்தில் உள்ள வேலூர் ஆகிய தமிழக நகரங்கள் பிறகு வெளி மாநிலங்களில் உள்ள தலா ஒரு ஊருக்கு வழி காட்ட உள்ளன.

பிரதமரின் தொகுதியான வாரணாசி மற்றும் அகமதாபாத், விசாகப்பட்டினம் அமராவதி உள்ளிட்ட நகரங்களில் வழிகாட்டி நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

இவை கடைசி 20 இடங்களில் உள்ள தலா ஒரு நகரத்திற்கு உதவும்.

Categories

Tech |