Categories
சினிமா தமிழ் சினிமா

“இனி வரும் காலங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம்”…. லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்….!!!!!!

இனி வரும் காலங்களில் தனது படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தர இருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கமல் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதையடுத்து விஜய்யின் தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கின்றார்.

மாஸ்டர் திரைப்படத்தில் விமர்சனம் ரீதியாக எழுந்த சர்ச்சைகளை சரி கட்ட போவதாகவும் இந்த படம் முழுக்க முழுக்க தன்னுடைய பாணியில் இருக்க போவதாக கூறியுள்ளார். இத்திரைப்படத்தில் விஜய் 40 வயதான கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்க இருக்கின்றதாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் தனியார் பொரியல் கல்லூரியில் நடைபெற்ற போதை பழக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் லோகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அவரிடம் மாணவர்கள் ஏஜென்ட் டீனாவின் கதையை படமாக எடுப்பீர்களா என கேட்டார்கள். அதற்கு அவர் பதில் அளித்ததாவது, எனக்கும் ஆசை இருக்கு. பெண்களுக்காக முக்கியத்துவமாக அந்த காட்சியை வைத்தேன். இனிவரும் படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கின்ற பொறுப்புணர்வு நிறையவே இருக்கின்றது. வரும் காலங்களில் ஏஜென்ட் டீனாவின் முன் கதைக்கும் சரியான கதை தோன்றினால் நிச்சயம் பண்ணுவேன் என கூறியுள்ளார்.

Categories

Tech |