சோதனையின்போது ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நடிகர் விஜய் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வருமான வரித்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
பிகில் திரைப்படத்திற்காக வாங்கிய சம்பளம் மற்றும் சொத்து மதிப்புகள் குறித்து நடிகர் விஜய் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
24 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் விஜயின் வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விஜய் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார், என எதிர்பார்க்கப்படுகிறது.