உங்களால் நீக்கப்பட்ட கோவை செல்வராஜ் ( தேர்தல் ஆணையம்) கூட்டத்தில் கலந்து கொண்டார் என்று கேட்ட கேள்விக்கு, பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நம்முடைய அண்ணன், இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் சார்பில் நானும், நம்முடைய தேர்தல் பிரதிநிதி செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தான் பங்கேற்றுள்ளோம்.
அதனால வேற வந்து பங்கு பெற்றதை வந்து எங்களிடம் கேட்காதீர்கள். நீங்க தேர்தல் ஆணையத்துக்கிட்ட கேளுங்க. எங்களுடைய கட்சி சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்கள் இரண்டு பேர் தான் கலந்து கொண்டோம்.
அவர் எந்த கட்சி சார்ந்தவர் என்று என்ன ஏன் கேக்குறீங்க? தேர்தல் கமிஷனிடம் தான் கேட்க வேண்டும். ஏங்க நாங்க எந்த கட்சி சார்ந்தவர்னே தெரியாதவர்ட்ட போய்ட்டு நாங்க எப்படி சொல்ல முடியும். எங்க கட்சி சார்புல அண்ணன் பொதுச்செயலாளர் சொன்னபடி 2 பேர் தான் கலந்துக்கிட்டோம்.. அதிமுக என்றாலே நாங்கள் தான் என தெரிவித்தார்.