Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈபிஎஸ்_சிடம் தொண்டர்கள் இல்லை…! டெண்டர்கள் தான் இருக்காங்க.. KC பழனிசாமி தாறுமாறு விமர்சனம்..!!

அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கே.சி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, அண்ணா திமுக தொண்டர்கள் எதை ஏற்கிறார்கள் ?  எதை விரும்புகிறார்கள் ? என்று தான் நான் பார்க்கிறேனே ஒழிய, எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொள்வதுதான் அண்ணா திமுக தொண்டரின் எதிர்ப்பார்ப்பு என்று இல்லையே…. உங்களுக்கு வேண்டுமென்றால் வாங்க, இல்லை என்றால் விட்ருங்க, எடப்பாடியிடம் நிச்சயமாக தொண்டர்கள் இல்லை.

டெண்டர்கள் தான் இருக்கிறார்கள், எல்லாரும் டெண்டர் பார்ட்டி தான் வந்துள்ளார்கள், டெண்டர் எடுத்தவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். அதாவது இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்-ம் டிசம்பரில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற வந்தார்கள், அப்போது அவர்கள் இரண்டு பேரும் உள்கட்ச்சி தேர்தல் என்று அறிவிக்கிறார்கள், எங்கேயோ தொண்டர்கள் வாக்களித்து அது நடக்கவில்லை. இவர்களால் மேலே இருந்து மாவட்ட செயலாளர்,

அந்த மாவட்ட செயலாளர் இருந்து ஒன்றிய செயலாளர், கீழே  கிளை வரைக்கும் நியமனங்கள் தான் நடந்தது. அப்போது இவர்களால் நியமிக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், அந்த பொதுக்குழுவால்  நியமிக்கப்பட்ட இபிஎஸ். இது எப்படி வந்து ஒரு ஜனநாயக முறையில் இருக்கிற தேர்தலாக இருக்கும்.

இதை  நீங்கள் எப்படி ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்றால்….  இன்றைய முதலமைச்சர் நாளைக்கு சட்டமன்ற தேர்தல் நடந்தால் இடைக்கால முதலமைச்சர். தமிழ்நாடு முழுக்க வாக்காளர் அடையாள அட்டையை திமுகவிற்கு ஓட்டு போடுபவர்களுக்கு மட்டும் கொடுத்து, ஒரு சட்டமன்றத் தேர்தல் நடத்தினால் தமிழ் சமுதாயம்,  தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?

ஊடகத்தை சார்ந்தவர்கள் அதை சரி என்று சொல்வார்களா?. இதைத்தான் எடப்பாடி பழனிச்சாமி செய்கிறார். தன்னை சுற்றி இருக்கிறவர்களை வைத்துக்கொண்டு ஒன்றை உருவாக்குகிறார். அதை நீதிமன்றத்தில் நீங்கள் போய் உங்கள் பலத்தை அந்த கூட்டத்தில் காமிங்கள் அதுதான் உண்மையானது என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை என விமர்சித்தார்.

Categories

Tech |