பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பனிமய மாதா கோவில் அமைந்துள்ளது. இங்கு மத வேறுபாடு இன்றி மக்கள் அனைவரும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கடந்த 26 ஆம் தேதி பணிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தேர்பவனி இன்று நடைபெறுகின்றது .இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பணிமயமாதா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் செந்தில்குமார் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தூத்துக்குடி தூய பனிமய மாதா திருத்தல பேராலய திருவிழா இன்று கொண்டாடப்படுகின்றது. இதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை விடப்படுகின்றது. அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே இந்த விடுப்பு பொருந்தாது. இது செலவானில் முறிவு சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் கிடையாது. இந்த விடுமுறைக்கு பதிலாக ஆகஸ்ட் 13ஆம் தேதி அன்று அலுவலக நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.