மெக்சிகோவில் உலகில் மிக நீளமான சாண்ட்விச் தயாரிக்கப்பட்ட புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ நாட்டின் வென்னிஸ்டியானோ கரன்சியா நகரில் 17 ஆவது டோர்டா கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் டோர்டா சாண்ட்விச் என்ற உணவு வகை 242.7 அடி நீளத்திற்கு தயாரிக்கப்பட்டது. மேலும் அந்த சாண்ட்விச் இரண்டு நிமிடங்கள் ஒன்பது வினாடிகளில் அடுக்கி நேரத்திலும் சாதனை படைத்துள்ளார்கள் அந்நாட்டின் சமையல் கலைஞர்கள்.
சுமார் 800 கிலோ எடை உள்ள இந்த நீளமான சாண்ட்விச்சை உருவாக்குவதற்கு பல்வேறு சமையல்காரர்கள் இணைந்து செயல்பட்டுள்ளனர். இந்த கண்காட்சியானது டோர்டா சமையல் தங்கள் வணிகங்களை மேம்படுத்துவதற்கான நியாயமான வாய்ப்பை வழங்குவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தங்களின் கடல் உணவு டோர்டா உணவகத்தை மூட வேண்டியிருந்தது. இந்த கண்காட்சி அவர்களுக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம் என கூறுகின்றனர்.