Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொரு மாதமும் ரூ.2500 பணம் கிடைக்கும்….. தபால் நிலையத்தின் வேற லெவல் திட்டம்….. உடனே போங்க….!!!!

தபால் துறையில் உள்ள இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.

இந்தியாவில் பல சிறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது . ஆனால் நமக்கு பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் தபால் நிலையத் திட்டங்கள் மிகவும் உகந்ததாக இருக்கும். இதில் அதிக வட்டி, லாபம் கிடைக்கும். வரிசலுகை போன்ற அம்சங்களும் உள்ளது. எனவே ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்கள் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களை தேர்வு செய்யலாம். தபால் நிலையத்தில் நிறைய சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அதில் மிக முக்கியமான ஒன்று மாத வருமான திட்டம்.

இந்த திட்டத்தில் 6.6% வட்டி கிடைக்கின்றது. ஆயிரம் ரூபாய் செலுத்தி இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் கணக்கு தொடங்கலாம். அருகில் உள்ள தபால் நிலையத்தில் இதற்கான விண்ணப்பம் கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலமாக நீங்கள் அதிகபட்சம் 4.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இணைப்பு கணக்காக இருந்தால் ஒன்பது லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் இணையலாம். கணக்கு தொடங்குவதற்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டா, ஆதார் கார்டு, பான் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை தேவைப்படும். நாமினி பெயரை இணைக்கும் வசதி இந்த திட்டத்தில் உள்ளது. இந்த மாத வருமான கணக்கில் குறைந்தபட்சம் 1500 பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும். டெபாசிட் செய்த பிறகு 12 மாதங்கள் கழித்து பணத்தை எடுக்க முடியும். மாதம் 2500 ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்க இந்த திட்டம் நல்ல உதவியாக இருக்கும்.

Categories

Tech |