Categories
தேசிய செய்திகள்

இனி பிரச்சினையே இருக்காது…. குடும்ப அட்டையில் அப்டேட்….. வெளியான சூப்பர் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகள் மூலமாக கிடைக்கும் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். நிறைய பேருக்கு இந்த ரேஷன் கார்டில் பிரச்சினை ஏற்படுவதால் ஏதேனும் அப்டேட் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். அதாவது குடும்ப உறுப்பினர் பெயர் சேர்ப்பு, நீக்கம், செல்போன் நம்பர் மாற்றம், முகவரி மாற்றம் போன்ற தேவைகளுக்கு எங்கு செல்வது என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளுக்குமே மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அதாவது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பொது சேவை மையங்கள் அமைப்பும், உணவு மற்றும் பொதுத்துறை விநியோக துறையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. அதன்படி நாடு முழுவதும் சுமார் 3.70 லட்சம் பொது சேவை மையங்கள் ரேஷன் கார்டு தொடர்பான சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |