கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் எதிரொடியாக தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிலும் சில மாவட்டங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி பள்ளி கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகிறார்கள்.
அவ்வகையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலனை கருதி பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.