இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் அவரது கன்சர்வேடிவ் கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பால் பிரதமர் பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இதனையடுத்து செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் பழமைவாத கட்சியை சேர்ந்த 1,80,000 உறுப்பினர்கள் ஓட்டு போட்டு புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்த தேர்தலில் வெளியுறவு மந்திரி லிஸ் ட்ரஸ் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷிசுனக்கும் போட்டியிடுகின்றார்கள்.
அதனை தொடர்ந்து முந்தைய கருத்துக் கணிப்பில் லிஸ் ட்ரஸ் முன்னிலையில் இருந்தார். இதற்கிடையில் கல்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் இடையே நடத்தப்பட்ட 2 வது கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 58% பேர் லிஸ் ட்ரஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 26% பேர் ரிஷி சுனக்குக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் முடிவு செய்யவில்லை என்று மீதி நபர்கள் கூறுகின்றனர்.