Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் சிக்கிய வயதான தம்பதியினர்…. மீட்பு குழுவினர் சாதனை…..!!!!

தர்மபுரி மாவட்ட ஒகேனக்கல் அருவிக்கு செல்லும் நடைபாதின் அருகே குன்று அமைந்துள்ளது. இந்த குன்றில் பொன்னாகரம் அருகில் உள்ள அத்திமரத்தூர் கிராமத்தில் குருசாமி(75) என்பவர் வசித்து வருகிறார். அவருடைய மனைவி பங்காரு அம்மாள்(72). இந்நிலையில் வயதான தம்பதி ஓகேனக்கல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆற்றின் நடுவில் அமைந்துள்ள முருகன் கோவில் சிக்கிக்கொண்டனர். அங்கிருந்து அவர்கள் வெளியேற முடியாமல் நேற்று மதியம் தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மீட்பு குழுவினர், வருவாய் துறை ஊரக வளர்ச்சித் துறையினர் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் வயது முதிரந்த தம்பதியை துரிதமாக மீட்கும் பனியில் ஈடுபட்டனர்.

இதற்காக காவிரி ஆற்றின் மறுமுனையில் இருந்து கோவிலில் இருந்த பகுதிக்கு செல்லும் ஆற்றை கடக்க கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் தற்காலிக நடைமேடை பாலம் அமைக்கப்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு படையினர் வயதான தம்பதியை. ஒருவர் பின் ஒருவராக ஸ்ட்ரெச்சர் போன்ற படுக்கையில் படுக்க வைத்து இறுக்க கட்டினர். அதன் பிறகு அங்கிருந்து தம்பதிகள் கட்டி வைக்கப்பட்டிருந்த படுக்கையை கயிறு கட்டி மறுமுனைக்கு பத்திரமாக மீட்டுக்கொண்டு வந்து அவர்களை மீட்டனர். இந்த மீட்பு பணி ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த வயதான தம்பதியை மீட்டர் தீயணைப்பு படையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

Categories

Tech |