2020- 2021ம் கல்வி ஆண்டு முதல் பொறியியல் படிப்பிற்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.
இதுதொடர்பாக மாநில உயர் கல்வித்துறைக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கல்விக் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டதாகவும், அதனால் புதிய வழிகாட்டுதலின்படி கல்வி கட்டணம் மற்றும் பேராசியர்களின் ஊதியத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
அதன்படி வரும் கல்வி ஆண்டு முதல் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்விக்கட்டணம் 85 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சத்து 58 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்விக் கட்டணத்தையும் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
AICTE தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் ஊதியத்தை 57 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.