Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதியவரை கொலை செய்த தந்தை மகன்… கோவை கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!!!!!!

கோவை அடுத்த கோவில் பாளையம் அருகே செங்கோட்டையை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அக்ரஹார சாம குளம் பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்துள்ளார். அதன் அருகே பன்றி இறைச்சி வியாபாரியான ராமசாமி என்பவர் வசித்து வருகின்றார். இந்த நிலையில்  தனக்கு சொந்தமான இடத்தை பழனிசாமி ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதாக ராமசாமி புகார் கூறிவந்துள்ளார். மேலும் பழனிசாமி வீடு கட்டுவதற்கு ரோட்டோரத்தில் மணல் கொட்ட கூடாது என ராமசாமி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பழனிசாமி ராமசாமியை  மண்வெட்டியால் அடிக்க வந்ததாக கூறப்படுகின்றது.

இது பற்றி ராமசாமி தனது மகன் ஏசு குமாரிடம் (35) தெரிவித்துள்ளார். இந்த சூழலில் கடந்த 2017 ஆம் வருடம் நவம்பர் மாதம் 12ஆம் தேதி ராமசாமியும் அவருடைய மகன் இயேசு குமாரனும்  சேர்ந்து பழனிசாமியை கத்தியால் சரமரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பழனிசாமி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமசாமி மற்றும் அவருடைய மகன் ஏசுகுமார் போன்றறோரை  கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அதனை விசாரித்த நீதிபதி பாலு குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளனர். அரசு தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் ஆஜராகி வாதாடியுள்ளார். இந்த வழக்கில் தண்டனை பெற்ற ராமசாமி ஏற்கனவே ஒரு பெண்ணை கொன்ற வழக்கில் கைதாகி கடந்த 1972 ஆம் வருட முதல் 1985 ஆம் வருடம் வரை 14 வருடங்கள் சிறை தண்டனை பெற்று வந்தவர். நன்னடத்தையின் காரணமாக சிறையில் இருந்து விடுதலையான ராமசாமிக்கும் கொலை வழக்கில் தற்போது ஆயுதங்களை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |