Categories
சினிமா தமிழ் சினிமா

மாடு மேய்க்கும் பிரபல தமிழ் நடிகர்…. வெளியான வீடியோ…!!!!

மன்சூர் அலி கான் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் எதிர் நாயகனாகவும், துணை கதாப்பாத்திரமாகவும் எண்ணற்ற திரைப்படங்கள் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்படத்துறை, மலையாளத் திரைப்படத்துறை மற்றும் தெலுங்குத் திரைப்படத்துறை என தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் தன்னுடைய வீட்டில் மாட்டை குளிக்க வைத்து, அதனை மேய்த்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

இது போன்ற எதையாவது அவ்வப்போது செய்து சமூக வலைதள ட்ரெண்டிங்கில் தவறாமல் இடம்பிடித்து விடுவார் மன்சூர் அலி கான். சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது மகனை கிண்டல் செய்த வீடியோ வைரலானது. அந்த வகையில் தற்போது மாட்டிடம் பேசிக் கொண்டே அவர் அதை குளிக்க வைக்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

https://youtu.be/pKXuLCGCCr4

Categories

Tech |