Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை….. கொடைக்கானல்-அடுக்கம் மலைப்பாதையில் 3 இடங்களில் மண்சரிவு….. அவதியில் மக்கள்….!!!

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள் ஆளாகியுள்ளனர். அதன்படி திண்டுக்கல், தேனி, நிலக்கரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் மூலம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று இரவு முதல் பலத்த மழை மற்றும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல்-அதுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் மலைப்பாதையில் இன்று அதிகாலை மூன்று இடங்களில் திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் குருடிகாடு என்னும் இடத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சாலை சேதம் அடைந்தது.

அதன் பிறகு அப்பகுதியில் மண் மூட்டைகளை கொண்டு சாலை சீரமைக்கப்பட்டு இருந்தது. மீண்டும் அந்த பகுதியில் இன்று மண்சரிவு ஏற்பட்டு சாலை முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால் தற்காலிகமாக அந்த சாலையில் நெடுஞ்சாலை துறையினர் போக்குவரத்து தடை விதித்துள்ளனர். இதனையடுத்து சாலை சேதம் அடைந்த பகுதியில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சீரமைக்கும் பணிகள் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மலை பாதை செய்தமடைந்ததால் அடுக்கம், பாலமலை, சாம்பக்காடு ஆகிய மலை கிராம மக்கள் விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

Categories

Tech |