Categories
உலக செய்திகள்

தைவான் விவகாரத்தில்…. சீனாவுக்கு ஆதரவளிக்கும்…. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே….!!

சீனா சொந்தம் கொண்டாடி வரும் தைவானுக்கு அந்நாட்டின் எதிர்ப்பை மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி சென்றுள்ளார். தைவான் அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.  இது குறித்து இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியதாவது,

“இலங்கைக்கான அமெரிக்க தூதர் கி சென்ஹாங் என்னை சந்தித்தார். அவரிடம், ‘ஒரே சீனா’ கொள்கையையும், நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு குறித்த ஐ.நா. சாசனத்தையும் இலங்கை ஆதரிப்பதாக தெரிவித்தேன். தற்போதைய உலகளாவிய பதற்றத்தை மேலும் தூண்டும்வகையிலான செயல்பாடுகளை நாடுகள் தவிர்க்க வேண்டும். பரஸ்பர மரியாதையும், பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் அமைதியான ஒத்துழைப்புக்கு முக்கியமான அடித்தளமாகும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |