Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ்அப் வழியே உபெர் டாக்ஸி முன்பதிவு செய்வது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

உபெர் செயலி வாயிலாக டாக்ஸி முன் பதிவு செய்பவர்களுக்கு இப்போது சூப்பர்வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் டெல்லி-தேசிய தலை நகர் பகுதியில் வசிப்பவர்கள் வாட்ஸ்அப்பில் Uber டாக்ஸியை முன் பதிவு செய்யலாம். இது தற்போது டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் மட்டுமே அறிமுகமாகியுள்ளது. விரைவில் இது நாடு முழுதும் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. இந்த அம்சம் சென்ற வருடம் லக்னோவில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது என உபெர் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

வாட்ஸ்அப் வழியே உபெர் டாக்ஸி முன் பதிவு செய்யும் வழிமுறைகள்

# +917292000002 என்ற எண்ணுக்கு நேரடியாக மெசேஜ் அனுப்ப வேண்டும்.

#  இந்த இணைப்பை https://wa.me/917292000002?text=Hi%20Uber கிளிக்செய்தாலும் WhatsApp chatல் உள்நுழையலாம்.

# அவற்றில் தோன்றும் QR கோடை ஸ்கேன் செய்யவும். அதன்பின் பிக்அப், ட்ராப் உள்ளிட்டவற்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி WhatsApp வாயிலாக பயணங்களை முன் பதிவு செய்பவர்கள் செயலியில் இருப்பது போன்ற பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவற்றையும் இதன் வாயிலாக பெறமுடியும். மேலும் புக்கிங் செய்த பிறகு டாக்ஸி ஓட்டுநரின் விபரங்கள் தொடர்பாகவும் தெரிவிக்கப்படும். பிக்-அப் பாயிண்டிற்கு போகும் வழியில் டிரைவரின் இருப்பிடத்தையும் நாம் கண்காணிக்க முடியும். இவற்றில்  புக் செய்வதற்கும், ஆப் முழ முன்பதிவு செய்வதற்கும் பெரிதளவில் வித்தியாசம் இல்லை. இருப்பினும் பயனர்களுக்கு இது எளிய முறையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |