Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில்….. இன்று கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகின்றது. நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் இருக்கும். நகரில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Categories

Tech |