தேவையான பொருட்கள்:
மீன் – அரை கிலோ
வெங்காயம் – அரை கிலோ
பச்சை மிளகாய் – ஆறு
இஞ்சி – 2 துண்டு
பூண்டு – 8 பல்
சீரகம் – 2 டீஸ்பூன்
கடுகு உளுந்தம் பருப்பு – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும் .அதனை ஒரு இட்லி தட்டில் வேகவைத்து முள்ளை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி அது சூடானதும். தேவையான அளவு கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும் .பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். அதனைத் தொடர்ந்து வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். பின் நறுக்கி வைத்த மிளகாயை போடவும். இவை அனைத்தும் ஓரளவு நன்றாக வதங்கியதும். உதிர்த்த மீன் கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து சிறு தீயில் வைத்து கிளறவும் இப்பொழுது சூடான மற்றும் ருசியான மீன் புட்டு தயார்.