வேலூர் அருகே தமிழகம் முழுவதும் இயங்கி வரும் பிரபல ஏஜென்சீ ஷோரூமில் திருடர்கள் கைவரிசை காட்டி இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வரும் பிரபல சத்யா ஏஜென்சி கிளை ஒன்று வேலூர் மாவட்டம் காட்பாடியில் செயல்பட்டுவருகிறது. இந்த ஷோரூமில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று ரூபாய் 40 ஆயிரம் ரொக்கப்பணம் 3 செல்போன்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளார்.
அதேபோல் அருகில் உள்ள குழந்தைகளுக்கான பொருட்களை விற்பனை செய்யும் ஷோரூம் ஒன்றிலும் ஷட்டரை உடைத்து நுழைந்து ரூபாய் 3500 ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளார். மறுநாள் காலையில் ஊழியர்கள் கடையை திறக்க வந்தபோது பொருள்கள் திருடு போனதை அறிந்த உடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆராய சென்றபோது கேமராக்கள் அனைத்தும் மேல் நோக்கித் திருப்பபட்ட படி இருந்தது. இது திருடனின் கைவரிசையாக இருக்கலாம் என்று நினைத்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து அங்கிருந்த ரேகைகளை சேகரித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.