மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள மேலமையிலாடி பகுதியில் ஓட்டுநரான மனோகர்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மனோகரை அவரது மனைவி செந்தமிழ் கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த செந்தமிழ் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த மனோகர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மனோகரனின் உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.