Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கரும்புகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரி…. குட்டியுடன் சென்ற யானை வழிமறித்ததால் பரபரப்பு….!!!

கரும்பு லாரியை யானைகள் வழிமறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி லாரி ஒன்று கரும்புகளை ஏற்றிக்கொண்டு கரும்பு ஆலையை நோக்கி சென்றது. இந்த லாரி காரப்பள்ளம் சோதனை சாவடிக்கு அருகே சென்றது. அப்போது குட்டியுடன் சென்ற யானை திடீரென லாரியை வழிமறித்தது. இந்த யானை தன்னுடைய குட்டியுடன் லாரியில் இருந்த கரும்புகளை பிடுங்கி தின்றது.

இதன் காரணமாக சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் ஓட்டுநர் லாரியில் இருந்த கரும்புகளை எடுத்து சாலையில் வீசினார். அதன் பிறகு தன்னுடைய குட்டியுடன் யானை சாலையில் கிடந்த கரும்புகளை சாப்பிட ஆரம்பித்தது. இதனையடுத்து ஓட்டுனர் தன்னுடைய லாரியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார். மேலும் லாரி சென்றதால் போக்குவரத்து நெரிசல் சரியாகி மற்ற வாகனங்களும் சென்றது.

Categories

Tech |